உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேட்புதுார் ரயில்வே பாலம் சேதம்;லாரி டிரைவர் கைது

கேட்புதுார் ரயில்வே பாலம் சேதம்;லாரி டிரைவர் கைது

ஈரோடு, நவ. 2கேட்புதுார் ரயில்வே நுழைவு பாலத்தை சேதப்படுத்தியதாக, நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவரை ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.ஈரோடு-சாவடிபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, கேட்புதுார் ரயில்வே நுழைவு பால பக்கவாட்டு சுவர் கடந்த 24ம் தேதி இரவு 8:30 மணிக்கு இடிந்து விழுந்தது. இதனால் ரயில் போக்குவரத்து தாமதமாகி, சாலை வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனை விசாரிக்க ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், தனி குழு அமைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சிசிடிவி கேமரா பதிவுகள் ஆராயப்பட்டது. இதில், உயரமான சரக்கு ஏற்றி இருந்த லாரி, பாலத்தின் உள் பகுதி வழியாக சென்றதும், பின்னர் நிற்காமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரி சுவரை மோதி சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மூலம் லாரி பதிவெண் தெரிய வந்தது.அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டம், ஒருவந்துாரை சேர்ந்த நாகராஜன், 44, என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ