உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஞ்., யூனியன் அலுவலகத்தில் சேதமடைந்த மழைநீர் தொட்டி

பஞ்., யூனியன் அலுவலகத்தில் சேதமடைந்த மழைநீர் தொட்டி

கரூர், :தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு தொட்டி சேதமடைந்த நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது.கரூர்-வெள்ளியணை சாலை தான்தோன்றிமலையில், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் செயல்படுகிறது. அதில், பல ஆண்டுகளுக்கு முன், போர்வெல் குழாய் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது, மழைநீர் சேகரிப்பு தொட்டி செடிகள் முளைத்து முட்புதராக மாறி விட்டது. அதை, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தான்தோன்றிமலை பஞ்., யூனியனுக்குட்பட்ட பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றப்படும் அலுவலகத்தில், மழைநீர் தொட்டி சேதமடைந்துள்ளதை சீரமைக்கவில்லை. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை