உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

கோபி, மகள் மாயமானதாக, கவுந்தப்பாடி போலீசில் தாய் புகாரளித்துள்ளார்.கவுந்தப்பாடி அருகே ஓடத்துறையை சேர்ந்தவர் ரங்கநாயகி, 28. இவர் கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது 12 வயது மகனுடன், அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 10ம் தேதி கோபி சென்று வருவதாக கூறி, வெளியே புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரின் மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப்பில் இருப்பது தெரியவந்தது. அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் ரங்கநாயகி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் கலாமணி, 50, கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்















அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை