உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நெரிஞ்சிப்பேட்டையில் பச்சை நிறத்துக்கு மாறிய காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களால் அதிர்ச்சி

நெரிஞ்சிப்பேட்டையில் பச்சை நிறத்துக்கு மாறிய காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களால் அதிர்ச்சி

பவானி, அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை கதவணையில், நீர் மின் திட்டத்திற்காக, 30 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி டெல்டா பாசனத்துக்கு, 10,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று தினங்களாக செக்கானூர், சின்னப்பள்ளம், நெருஞ்சிப்பேட்டை பேரேஜ் பகுதிகளில், மீன்கள் இறந்து ஆற்று தண்ணீரில் மிதக்கிறது.இதுகுறித்து கரையோர மக்கள் கூறியதாவது: காவிரி ஆற்று நீர் கடந்த சில நாட்களாகவே, பல கழிவு கலப்பதால், பச்சை கலரில் பாசம் பிடித்தது போல் உள்ளது. இந்நிலையில்தான் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் கரையோரம் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது.இந்த தண்ணீரைதான் இப்பகுதி மக்களும் குடிக்கின்றனர். இதனால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை