உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோர்ட் புறக்கணிக்க முடிவு

கோர்ட் புறக்கணிக்க முடிவு

பெருந்துறை: பெருந்துறை வக்கீல் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், பெருந்து-றையில் நேற்று நடந்தது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மோகன்பாபு, பொருளாளர் சித்ரா முன்னிலை வகித்தனர். செயலாளர் அர்ஜுனன் வரவேற்றார்.பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து, நாளை, ௧௮ம் தேதி நீதிமன்ற பணியை புறக்கணிக்க முடிவு செய்தனர். இந்த நாட்களில் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன், உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏக மனதாக முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை