உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவின் கால்நடை தீவனத்தை மானியத்தில் வழங்க கோரிக்கை

ஆவின் கால்நடை தீவனத்தை மானியத்தில் வழங்க கோரிக்கை

ஈரோடு:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: தமிழகத்திலேயே ஆவின் சார்பில், ஈரோட்டில் தான் கால்நடை கலப்பு தீவன உற்பத்தி ஆலை செயல்படுகிறது. ஒரு கிலோவுக்கு, 4 ரூபாய் மானியத்தில், ஆவினுக்கு பால் ஊற்றுவோருக்கு வழங்கப்படுகிறது.50 கிலோ கலப்பு தீவன மூட்டை, 1,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் கிலோவுக்கு, 4 ரூபாய் மானியமாக குறைத்து வழங்குவர். கடந்த சில மாதமாக ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் மட்டும் கிலோவுக்கு, 4 ரூபாய் மானியமின்றி பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். சாதாரணமாக ஒரு மாட்டுக்கு, 2 கிலோ வரை கால்நடை கலப்பு தீவனம் வழங்கினால், பால் அதிகமாகவும், தரமாகவும் கிடைக்கும். இதுபற்றி மாவட்ட நிர்வாகம், ஆவின் நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், இரு மாவட்டங்களிலும் மானியத்தில் கால்நடை கலப்பு தீவனம் வழங்கப்படுவதில்லை. அரசு, ஆவின் நிர்வாகம் ஆய்வு செய்து, மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி