உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொது கழிப்பறை இடிப்பு; குடிநீர் இணைப்பு கட் திறந்தவெளி கழிப்பிடமான சூரம்பட்டி ஓடைமேடு

பொது கழிப்பறை இடிப்பு; குடிநீர் இணைப்பு கட் திறந்தவெளி கழிப்பிடமான சூரம்பட்டி ஓடைமேடு

ஈரோடு: ஈரோட்டை மாநகராட்சி, ௪௮வது வார்டு, சூரம்பட்டி ஓடைமேடு பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்கள், பெரும்பள்ளம் ஓடையை ஒட்டிய பொது கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். ஓடை விரிவாக்கத்தின் போது, கழிப்பிடம் பாதி இடிக்கப்பட்டது. கழிப்பிடத்துக்கான குடிநீர் இணைப்பையும் மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் மக்கள், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஓராண்டாக சாலையோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால், அப்பகுதி துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இடிக்கப்பட்ட பொது கழிப்பிடத்தை சீரமைத்து, குடிநீர் இணைப்பு கொடுத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை