உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 20-தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெருந்துறை வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வி.ஏ.ஓ., ஜான் முன்னிலை வகித்தார்.அடங்கல் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வி.ஏ.ஓ.,க்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான உபகரணங்களை வழங்காதது சிரமமாக உள்ளது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வரும், 30ல் கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ