உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணையில் 11 மாதம் அடைத்து வேலை வாங்கிய கொடூரம்சம்பளம் தராமல் விரட்டி விட்டதாக தர்மபுரி தம்பதி குமுறல்

பண்ணையில் 11 மாதம் அடைத்து வேலை வாங்கிய கொடூரம்சம்பளம் தராமல் விரட்டி விட்டதாக தர்மபுரி தம்பதி குமுறல்

ஈரோடு:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, மின்னமஞ்சாவடியை சேர்ந்த தம்பதி ரவி, 35; மணிமேகலை, 30; இவர்களுக்கு ரோகித், 13, என்ற மகனும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்த தம்பதியர், கலெக்டரிடம் மனு வழங்கி கூறியதாவது:ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கோணரிபட்டியில், தோட்டத்துடன் கூடிய ஒரு பண்ணை வீட்டை சேர்ந்த சிலர், எங்களை வேலைக்கு அழைத்து வந்தனர். கடந்த ஏப்., மாதம் கைக்குழந்தையுடன் தோட்டத்துக்கு வந்தோம். மாதம், 25,000 ரூபாய் சம்பளம் பேசினர். தோட்டத்து வேலை, வீட்டு வேலை செய்தோம்.மகன் ரோகித், தர்மபுரியில் உறவினர் வீட்டில் தங்கி கடந்தாண்டு, ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு, விடுமுறையில் எங்களை பார்க்க வந்தார். விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல முயன்றபோது, ரோகித்தும் சேர்ந்து வேலை செய்தால்தான் பணம் தருவோம், எனக்கூறி அவரையும் விடுவிக்கவில்லை. 11 மாதம் வேலை செய்துள்ளோம். அவ்வப்போது, 4,000 ரூபாய், 5,000 ரூபாய் மட்டும் கொடுத்தனர். கடந்த இரண்டு மாதமாக வெளியே அனுப்பும்படி கேட்டபோது தாக்கினர். அம்மாபேட்டை போலீஸில் புகார் செய்த நிலையில், இருவரையும் அழைத்து பேசி அனுப்பினர். மீண்டும் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதுபற்றி விசாரித்து சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.ஈரோடு கலெக்டர் அலுவலக அதிகாரிகள், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு, இப்பிரச்னை தொடர்பான வீடியோ ஆதார அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். ஆனால், தங்களால் வழக்கு, விசாரணைக்கு அலைய இயலாது; சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும் என தம்பதி கேட்டு கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி