உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன், பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், டிசம்பர்-3 இயக்க மாநில துணை பொதுச் செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வருவாய் துறை மூலம் வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை, 1,500 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் வழங்கி வரும் உதவித்தொகை, 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கான உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும், 4 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசு வேலைகளில் போட்டி தேர்வுகளில் இருந்து, விலக்கு அளித்து வேலைவாய்ப்பு பதிவு மூலம் முன்னுரிமை அடிப்படையில், 4 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை