உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 67 மாற்று திறனாளிக-ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க, 2023ல் அர-சாணை வெளியிடப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. இதில் திட்ட பயனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட மாற்று திறனுடையோர் நல சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நவ-நீத கிருஷ்ணன், பகுதி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திட்ட பொறுப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாயை, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வழங்க, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை