மேலும் செய்திகள்
'முடிவுற உள்ள பணிகளை விரைவுபடுத்துங்கள்'
04-Nov-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக கடல்சார் வாரிய முதன்மை செயலருமான வெங்கடேஷ் ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு, மனு வழங்கிய மக்களிடம் குறை கேட்டறிந்தார். சோலாரில் கட்டப்பட்டு வரும் புறநகர் பஸ் ஸ்டாண்ட் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடிக்க யோசனை தெரிவித்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மாவட்ட நுாலக கட்டடத்தை பார்வையிட்டு, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்து, ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.இதில் கலெக்டர் கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், மேயர் நாகரத்தினம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Nov-2025