கண்துடைப்புக்காக நடக்கும் நகராட்சி கூட்டம் தி.மு.க., கவுன்சிலர் பகிரங்க குற்றச்சாட்டு
கண்துடைப்புக்காக நடக்கும் நகராட்சி கூட்டம்தி.மு.க., கவுன்சிலர் பகிரங்க குற்றச்சாட்டுபுன்செய் புளியம்பட்டி, செப். 28-புன்செய்புளியம்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் சிதம்பரம், கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் வழக்கம் போல் ஒரு சில கவுன்சிலர்கள் மட்டும் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னை குறித்து பேசினர்.ஆளுங்கட்சி (தி.மு.க.,) கவுன்சிலர் பூர்ண ராமச்சந்திரன் பேசியதாவது: நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணி, கடை ஏலம், டெண்டர் விபரங்கள் தொடர்பாக, கவுன்சிலர்களுக்கு எந்த அறிவிப்பும் தருவதில்லை. தீர்மானங்கள் தயார் செய்யும்போதும் கவுன்சிலர்களிடம் ஆலோசிப்பதில்லை. இதன்மூலம் நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. இதுவரை நடந்த, 38க்கும் மேற்பட்ட நகர்மன்ற கூட்டம் கண் துடைப்புக்காகவே நடத்தப்பட்டது. நகராட்சி பொறியாளர், மேலாளர் கூட்டணி அமைத்து தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இவ்வாறு பேசினார். பதிலளித்து பேசிய துணைத்தலைவர் சிதம்பரம், ''நகராட்சியில் அனைத்து பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.