உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்

ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்

ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்டி.என்.பாளையம், டிச. 2--துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில், ரேக்ளா பந்தயம் மற்றும் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில் தி.மு.க., நெசவாளரணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பந்தயம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், ஒரு குதிரை ரேக்ளா வண்டி பாய்ந்து சென்றபோது, சிந்து ரவிச்சந்திரன் மீது உரசியது. இதில் முகம், வயிறு பகுதியில் அடிபட்ட நிலையில் நிலைதடுமாறி விழுந்து மயக்கமடைந்தார். கட்சியினர் அவரை மீட்டு கோபி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் நலமுடன் இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !