மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி
09-Nov-2024
ஈரோடு: தி.மு.க., இளைஞரணி மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில துணை செயலாளரும், ஈரோடு எம்.பி.,யுமான பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோட்டில் தி.மு.க., இளைஞரணியின், 4,5 மண்டலங்களுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த மண்டலத்தில், 61 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக, இளைஞரணி மாநில செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி மேற்கு மண்டலத்தில் போட்டியிட வலியுறுத்தியுள்ளோம்.சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநில இளைஞரணி மாநாட்டில், எட்டு லட்சம் பேர் வரை பங்கேற்றனர். இளைஞரணியில், 50 லட்சம் உறுப்பினர்களை கடந்து சேர்க்க இலக்கு நிர்ணயித்து, 25 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் சேர்த்துள்ளோம். தி.மு.க.,வில் இருந்து வந்ததால் அரசியலில் எம்.ஜி.ஆரால் வெற்றி பெற முடிந்தது. தி.மு.க.,வை வைத்து தான் யாராக இருந்தாலும் வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
09-Nov-2024