உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு விழாவை தொடங்கி வைத்த தி.மு.க., - மா.செ.,அப்பட்டமான விதிமீறல் என அ.தி.மு.க., குற்றச்சாட்டு

அரசு விழாவை தொடங்கி வைத்த தி.மு.க., - மா.செ.,அப்பட்டமான விதிமீறல் என அ.தி.மு.க., குற்றச்சாட்டு

புன்செய்புளியம்பட்டி:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், முதலமைச்சர் கோப்பைக்கான ஈரோடு மாவட்ட அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி, புன்செய்புளியம்பட்டி கெ.ஓ.எம்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியை, தி.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசிவம் துவக்கி வைத்தார். எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத நல்லசிவம், போட்டியை துவக்கி வைத்தது அப்பட்டமான விதிமீறல் என்று, அ.தி.மு.க., தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:அரசு விழாவை பொருத்தவரை மக்கள் பிரதிநிதிகள் அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் துவக்கி வைப்பதே விதிமுறை. ஆனால் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத நல்லசிவம் போட்டிகளை துவக்கி வைத்தது விதிமீறலாகும். அவருடன் தி.மு.க., நிர்வாகிகளும் கலந்து கொண்டு கட்சி நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். பள்ளி தலைமை ஆசிரியர் உமா கவுரி கூறுகையில், ''ஈரோட்டில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை