டாக்டர்கள் போராட்டம்
டாக்டர்கள் போராட்டம்தாராபுரம், நவ. 15-சென்னை கிண்டியில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை, பெண் நோயாளியின் மகன், நேற்று முன்தினம் கத்தியால் குத்தினார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்படி தாராபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நேற்று அவசர சிகிச்சை தவிர மற்ற சிகிச்சை சார்ந்த நோயாளிகளை புறக்கணித்தனர். ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பெருமளவு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.