வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் பணி துவக்கம்
ஈரோடு, 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில்' பெருந்துறை தாலுகாவில் நேற்று சோதனை முயற்சி துவங்கி, 70 வயதுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கினர்.இதுபற்றி ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: கடையில் இருந்து பயனாளிகள் வீடு வரை வாகனத்தில் செல்லும் நேரம், அடுத்தடுத்த அட்டைதாரர்களின் வீட்டுக்கு செல்லும் துாரம், நேரம், செலவு, அதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதே நாளில் ரேஷன் கடைக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதையும், அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவிப்பார்கள். அதுவரை சோதனை முயற்சி பணி நடக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.