உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்

ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்

பு.புளியம்பட்டி: பண்ணாரியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்-கொண்டு சத்தியமங்கலத்துக்கு, ஒரு அரசு டவுன் பஸ் நேற்று காலை சென்றது. ராஜன் நகர் பாலம் அருகே, வளைவில் சென்ற-போது டிரைவர் பிரகாசுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்புகளின் மீது மோதி நின்றது. மயங்கிய நிலையிலும் டிரைவரின் சாமர்த்தி-யமே இதற்கு காரணம். அதேசமயம் மயக்கமடைந்த டிரைவரை, ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ