விபத்தில் டிரைவர் பலி
பவானி, சேலம் மாவட்டம் கொளத்துார், வீரக்குமரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நவாப், 56; லாரி டிரைவர். டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில், நேற்று முன்தினம் இரவு, அத்தாணி-சந்தைக்கடை பஸ் நிறுத்தம் அருகே சென்றார். அப்போது தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.