டிரோன்கள் பறக்க தடை
ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதல்வர் விஜய், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஈரோடு மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக நாளை வருகிறார். பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி, முதல்வர் பயணம் செய்யும் முதன்மை பாதை வழிகளில், 2 கி.மீ., சுற்றளவில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.