குடிபோதை தந்தையால் மகன் விபரீத முடிவு
காங்கேயம்:காங்கேயத்தை அடுத்த மறவபாளையத்தை சேர்ந்த மூர்த்தி மகன் ஜீவா, 25; படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தார். தந்தை தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மது குடித்துவிட்டு வந்தால், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.