உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாண்ட் அருகே போதையில் ரகளை; கண்டக்டர், டிரைவர் கைது

பஸ் ஸ்டாண்ட் அருகே போதையில் ரகளை; கண்டக்டர், டிரைவர் கைது

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே, மது போதையில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்-தியது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே, அகில்மேடு 7வது வீதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு நேற்று மாலை 4:15 மணிக்கு தனியார் பஸ் கண்டக்டர், டிரைவரும் மது குடிக்க சென்-றனர். சிறிது நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் வந்து, பொதுமக்களிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசிய-படி இருந்தனர்.சாலையின் நடுவே நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் வாக-னங்களுக்கு வழிவிடாமல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, பொருட்களை நாசம் செய்யும் வகையில் செயல்பட்டனர். இதில் ஒருவர், சட்டையை கழற்றிய நிலையில் அரை நிர்வாணமாக பொதுமக்களை மிரட்டியவாறு இருந்தார். தனியார் பஸ்சுக்கு அடியில் படுத்துக் கொண்டு பஸ்சை செல்லவி-டாமல் வழிமறித்தார். தகவல் அறிந்த வந்த போலீசாரையும் தகாத வார்த்தைகளால் பேசியவாறு இருந்தார். இந்நிலையில், அங்கிருந்த டாஸ்மாக் கடைக்குள் சென்று குடிமகன்கள், ஊழியர்-களிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த பிற குடிமகன்கள் இருவரையும் பிடித்து அடித்து உதைத்தனர். மேலும் இதில் ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். டவுன் போலீசார், இருவரையும் பெரும் போராட்டத்துக்கு இடையே குண்டு கட்டாக துாக்கி, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரகளையில் ஈடுபட்ட கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த டிரைவர் ராஜசேகர், 52, ராசி-புரம் நாமகிரி பாளையம் புதுப்பட்டியை சேர்ந்த கண்டக்டர் கவுதம், 23, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !