சர்ச்சுகளில் ஈஸ்டர் கொண்டாட்டம்
ஈரோடு: ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் மார்ச், 5ல் சாம்பல் புதன் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சர்ச்களில் பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. கடந்த, 13ல் குருந்தோலை ஞாயிறு, 17ல் பெரிய வியாழன், 18ல் புனித வெள்ளி சிலுவை வழிபாடு நடந்தது. ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு புனித அமல அன்னை சர்ச்சில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒளி வழிபாடு, திருமுழுக்கு புதுப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்தெழும் காட்சி அமைக்கப்பட்டது. ஈஸ்டரையொட்டி புனித அமல அன்னை ஆலய பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறி ஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.இதேபோல் ஈரோடு சி.எஸ்.ஐ., சர்ச், ரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம், பி.பெ.அக்ரஹாரம் லுார்து மாதா ஆலயம், பெரியசேமூர் செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.