மேலும் செய்திகள்
பூக்கள் விலை உயர்வு
07-Jul-2025
புன்செய்புளியம்பட்டி, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஒரு கிலோ சம்பங்கி, 240 ரூபாய்க்கு விற்றது.பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளான பகுத்தம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி, தாண்டாம்பாளையம், எரங்காட்டூர் ஆகிய கிராமங்களில், 500 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. தினமும் ஒரு டன் வரை புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு சம்பங்கி பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கோவில் திருவிழா, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு கட்டப்படும் மாலைகளில், சம்பங்கி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைச்சல் இருந்தபோதும், போதிய விலை கிடைக்காமல் ஏமாற்றம் தொடர்ந்தது. தற்போது, ஆடி அமாவாசையை முன்னிட்டு, சம்பங்கி விலை கணிசமான அளவில் உயரத்துவங்கி உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்ற சம்பங்கி, நேற்று விலை உயர்ந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது. விலை உயர்வால், சம்பங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் மல்லிகை ஒரு கிலோ 1,000 ரூபாய், முல்லை 320 ரூபாய், கனகாம்பரம், 800 ரூபாய்க்கு விற்பனையானது.
07-Jul-2025