கல்வி கனவு நிகழ்ச்சி இன்று, 16ல் ஏற்பாடு
ஈரோடு, 'நான் முதல்வன்' திட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் உயர் கல்விக்கான வழிகாட்டும், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி இன்று மற்றும் வரும், 16ம் தேதி இரு கட்டமாக நடக்க உள்ளது.முதற்கட்டமாக கோபி கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று கோபி கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. 16ம் தேதி அன்று ஈரோடு வேளாளர் மகளிர் கல்வி நிறுவனத்தில் காலை, 9:00 மணி முதல் நடக்க உள்ளது.இதில் கல்வி நிறுவனங்கள், அதில் உள்ள வாய்ப்பு, கல்வி கடன், உதவித்தொகை குறித்த வழிகாட்டுதல்களை வல்லுனர், கல்வியாளர்கள் வழங்கவுள்ளனர். பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், வணிகம், கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன் வளத்துறை உட்பட அனைத்து வகையான உயர் கல்விக்கான வாய்ப்பு குறித்தும் விளக்கவுள்ளனர்.