உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

ஈரோடு, கரூர் மாவட்டம் பரமத்தி, கலராபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 55, கூலி தொழிலாளி. தற்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமிபாளையத்தில் வசிக்கிறார். மனைவி இறந்து விட்டார். இவருக்கு, 12 வயதில் மகன் உள்ளார். அப்பகுதியை சேர்ந்த, 6 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதைப்பார்த்த அப்பகுதி சிறுவர், சிறுமியர் அங்கிருந்தவர்களிடம் தெரிவிக்க, மக்கள் சென்று சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சிவகிரி போலீசில் அளித்த புகாரின்படி, பெரியசாமி மீது போக்சோவில் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் பரமத்தி வேலுாரில் பெரியசாமியை நேற்று கைது செய்து, சிவகிரி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ