மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
03-Jan-2025
தேனீ கொட்டி முதியவர் சாவுகாங்கேயம், ஜன. 3-காங்கேயம் அருகே நத்தக்காட்டுவலசை சேர்ந்த விவசாயி சாமியப்பன், 85; தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ கூட்டமாக பறந்து வந்த மலைத்தேனீக்கள் சரமாரியாக கொட்டின. இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சாமியப்பன் இறந்தார்.
03-Jan-2025