மேலும் செய்திகள்
கார் மோதி நடந்து சென்றவர் பலி
29-Dec-2024
பு.புளியம்பட்டி: சைக்கிளில், சாலையை கடக்க முயற்சித்த முதியவர் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதி துாக்கி வீசப்பட்டதில், எதிரே வந்த கார் மீண்டும் மோதியதில் உயிரிழந்தார்.புன்செய்புளியம்பட்டி அருகே, எரங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம், சைக்கிளில் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், எரங்காட்டு பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பு.புளியம்பட்டி ஆதிபராசக்தி அம்மன் கோவில் அருகே, இணைப்பு சாலையில் வலது புறம் திரும்ப முயற்சித்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஆறுமுகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.இதில் துாக்கி வீசப்பட்ட ஆறுமுகம், சாலையின் வலது புறம் விழுந்த போது, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து பழனி நோக்கி, வந்து கொண்டிருந்த ஹெக்சா கார் ஆறுமுகம் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
29-Dec-2024