| ADDED : நவ 29, 2026 06:44 AM
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க
திருத்தம் குறித்த, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி
பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ.,
ஜெயராமன் முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர்
மற்றும் அரசு நிதித்துறை சிறப்பு செயலர் லலிதா தலைமை வகித்து
பேசியதாவது:விடுபட்ட, இளம், முதன்முறை வாக்காளர்கள், தகுதி
பெறும் நபர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கில்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடக்கிறது. மாவட்ட
அளவில் இதற்காக கடந்த, 21, 22 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடந்தது.
இன்று மீண்டும் சிறப்பு முகாம் நடக்கிறது.இம்முகாமில், 18 வயது
நிரம்பி, தகுதி உடைய அனைத்து வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளை
பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதிகள்
தகுதியான வாக்காளர்களை கண்டறிந்து சேர்க்க உதவிட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் கல்வியறிவு குழு
மூலம் நடத்தப்பட்ட கட்டுரை, வினாடி - வினா போட்டிகளில் வென்ற மாணவ,
மாணவியரை, லலிதா பாராட்டி சான்று, பரிசு வழங்கினார். நிகழ்வில்
மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், கலெக்டரின் நேர்முக உதவியாளர்
(பொது) தேன்மொழி, அரசியல் கட்சி பிரதிநிதிகள் விஜயபாஸ்கர்,
சந்திரசேகர், சோழா லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.