உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி சக்கரத்தில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி

லாரி சக்கரத்தில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி

காங்கேயம்: காங்கேயம், திருப்பூர் சாலை, பாரதியார் வீதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் காதர் பாட்சா, 28; ஹோண்டா பைக்கில் காங்கேயம்-திருப்பூர் சாலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் சென்றார்.அதே திசையில் சிமெண்ட் மூட்டை ஏற்றிய லாரி சென்றது. இடது புறமாக லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக முன்பக்க சக்கரத்தில் மோதி விழுந்தார். பின்சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ