மேலும் செய்திகள்
மின் ஊழியர் மீது போக்சோ வழக்கு
08-Aug-2026
ஈரோடு:ஈரோடு சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, 56; அவல்பூந்துறை மின் வாரிய அலுவலக போர்மேன். ஈரோட்டை சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, மூர்த்தியை நேற்று கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
08-Aug-2026