உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

மொபைல் கோபுரத்தில் இருந்துசுருண்டு விழுந்த ஊழியர் பலிபவானி, நவ. 12-சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பூபாலன் மகன் ராமச்சந்திரன், 26; சித்தோட்டை அடுத்த செல்லப்பகவுண்டன் பிரிவு அருகே தனியார் செல்போன் கோபுரத்தில், நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மயங்கிய ராமச்சந்திரன், ௭ அடி உயரத்தில் இருந்து விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ