மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் 15 -வது மாவட்ட மாநாடு
03-Dec-2024
ஈரோடு: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியு-றுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோட்டில் பல்-வேறு அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஈரோடு மாவட்ட தொழில் மையம் முன், கிளை தலைவர் மவுலி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்து-ணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், பஞ்., செயலர்கள், ஊர்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உட்-பட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால-முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.முதல்வரின் காலை உணவு திட்டத்தை, அனைத்து பள்ளிக-ளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டே அமலாக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதேபோல, அரசு ஐ.டி.ஐ., - மாவட்ட வேலைவாய்ப்பு அலு-வலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உட்பட பல்-வேறு அலுவலகங்கள் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் விஜயம னோகரன், மாவட்ட துணைத் தலைவர் ராக்கிமுத்து உட்பட பலர் பங்கேற்-றனர்.
03-Dec-2024