எண்ணமங்கலம் பஞ்.,ல் ரூ.1.9 கோடியில் சாலை
அந்தியூர், அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பஞ்., மூங்கில்பாளையம் முதல் ஆலயங்கரடு வரை, 5 கி.மீ., தொலைவுக்கு, 1.9 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்வில் அந்தியூர் பி.டி.ஓ., சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் மதன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.