மேலும் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
11-Feb-2025
ஈரோடு: ஈரோட்டில், நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்-டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த, 2009 பிப்.,19ல் வக்கீல்-கள்-போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், வக்-கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆண்டுதோறும் வக்கீல்கள் பிப்., 19ஐ கருப்பு நாளாக கடைப்பிடித்து, நீதிமன்ற பணி புறக்க-ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வக்கீல்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஈரோட்டில், 950க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.* அந்தியூர் சார்பு நீதிமன்றத்தில், 30க்கும் மேற்பட்ட வக்-கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.* கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் காளத்தி-நாதன் தலைமை வகித்தார். வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்-டத்தை இயற்றிட, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்களின் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்-டனர்.
11-Feb-2025