உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு:ஓவர் குடியால் மரணம்

ஈரோடு:ஓவர் குடியால் மரணம்

ஈரோடு:மொடக்குறிச்சி, காட்டுபாளையம், சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் பாபு, 55; ஓராண்டாக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் பிட்டராக பணியாற்றினார். இவரின் மனைவி சுதா. கட்டட தொழிலாளி. திருமணத்தில் இருந்தே மது பழக்கத்துக்கு பாபு அடிமையாக இருந்தார். ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில், சரிவர சாப்பிடாமல் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணியாற்றும் கம்பெனியில் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி