உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சலுகைகள் துண்டிப்பு பி.எஸ்.என்.எல்., தர்ணா

சலுகைகள் துண்டிப்பு பி.எஸ்.என்.எல்., தர்ணா

ஈரோடு: பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு பொது மேலாளர் அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் ரசீது இன்றி ஊழியர்களுக்கு வழங்கி வந்த மருத்துவ செலவுப்படி, பயண விடுப்புச்சலுகை, பயண விடுப்பு ஒப்படைப்பு தொகை போன்றவை பறிக்கப்பட்டுள்ளது. இச்சலுகைகள் மத்திய அரசின் உத்தரவு மற்றும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் வழங்கப்படுபவையாகும். நிர்வாகம் இவற்றை தன்னிச்சையாக ரத்து செய்யக்கூடாது. பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நிதி நெருக்கடியில் இருந்து மீளவும், வலுப்படுத்தவும் நிதியாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். சங்க மாவட்ட செயலாளர்கள் தங்கவேல், பெரியசாமி, காசிராஜன், சாமுவேல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ