உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபச்சார புரோக்கர்கள்பெருந்துறையில் கைது

விபச்சார புரோக்கர்கள்பெருந்துறையில் கைது

பெருந்துறை: பெருந்துறைக்கு வேலை தேடி வரும் பெண்களை ஏமாற்றி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.பெருந்துறையை சேர்ந்த வாலிபர், கந்தாம்பாளையம் பிரிவு அருகே பைக்கில் சென்றபோது, பைக்கை நிறுத்திய ஒருவர், விபச்சாரத்துக்கு அழைத்துள்ளார். தன்னிடம் பணமில்லை, எடுத்து வருவதாக கூறிய அந்த வாலிபர், பெருந்துறை போலீஸில் தகவல் கூறினார்.அந்த வாலிபருக்கு 300 ரூபாய் பணம் கொடுத்த, போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அனுப்பினார். அந்த வாலிபரும் புரோக்கரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர் பக்கத்தில் இருந்த வீட்டுக்கு வாலிபரை அழைத்து சென்றார்.பின் தொடர்ந்து வந்த போலீஸார், அந்த வீட்டிலிருந்த இளம்பெண்ணையும், பெருந்துறை சென்னிமலை ரோடு, ஆனந்த் நகரைச் சேர்ந்த ராஜாமணி (63), ஈரோடு, பழைய பாளையம், இந்து நகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சிவகுமார் (39) ஆகியோரை பிடித்தனர். ஆண்கள் இருவரும் விபச்சார புரோக்கர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த இளம்பெண், பெருந்துறை 'சிப்காட்'ல் வேலை தேடி வந்த போது, இவர்களிடம் சிக்கியது தெரியவந்தது. பெண்ணின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர் ஒப்படைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை