உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 மாதத்தில் ரூ.11.50 கோடி நல உதவி

2 மாதத்தில் ரூ.11.50 கோடி நல உதவி

ஈரோடு: ''மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 4,500 பேருக்கு 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், 436 பேருக்கு ஒரு கோடியே 30 லட்சத்து 31 ஆயிரத்து 385 ரூபாய் மதிப்பில், அரசின் நல உதவிகள் வழங்கி, அமைச்சர் ராமலிங்கம் பேசியதாவது: ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி 100 நாளில் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில், திட்டங்களை தீட்டி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் இரு மாதங்களில் 4,500 பேருக்கு, 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகா வரவேற்றார். ஆர்.டி.ஓ., சுகுமார் நன்றி கூறினார். கூட்டுறவு இணைப் பதிவாளர் பாபு, மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, வள்ளிபுரத்தான் பாளையத்தில் கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் ராமலிங்கம் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி