| ADDED : செப் 07, 2011 01:41 AM
கோபிசெட்டிபாளையம் :கோபி நகராட்சி கூட்டத்துக்கு வந்த துணைத் தலைவி, கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். கோபி நகராட்சி துணைத் தலைவியாக தி.மு.க.,வை சேர்ந்த மோகனாம்பாள் உள்ளார். சென்ற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்துக்கு வந்த மோகனாம்பாள், கூட்டம் முடிந்ததும், நகராட்சி கமிஷனர் ஜான்சன் ஜீப்பில், தனது வீட்டுக்கு சென்றார். நகராட்சி கமிஷனர் ஜீப்பில் துணைத்தலைவர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என, கேள்வி எழுந்தது. இதை, 'காலைக்கதிர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டது.கோபி நகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற துணைத்தலைவர் மோகனாம்பாள், கூட்டம் முடிந்ததும், அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் காத்து இருந்தார். ஐந்து நிமிடத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஏறி வீட்டுக்கு சென்றார்.