உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்சி பிரமுகர்களின் டூவீலர் நம்பர் பிளேட்டில் கைவைக்க அச்சம்

கட்சி பிரமுகர்களின் டூவீலர் நம்பர் பிளேட்டில் கைவைக்க அச்சம்

கோபிசெட்டிபாளையம்: அரசியல் கட்சி நிர்வாகிகளின் நம்பர் பிளேட் விதிமீறல்களை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.கோபி சுற்று வட்டாரத்தில், ஆர்.டி.ஓ., ஜெயக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, நடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். வாகன தணிக்கையில் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 53 வாகனங்களுக்கு குற்ற தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. வேறு மாநிலத்தில் இருந்து அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட ஒன்பது வாகனங்களுக்கு 41 ஆயிரத்து 85 ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. அதிக பாரம் ஏற்றிய ஏழு வாகனங்களுக்கு 44 ஆயிரத்து 650 ரூபாய் அபராதமும், நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.ஓட்டுனர் உரிமம் இல்லாமல் 15 வாகனங்கள், மண் லோடு தார்பாய் இன்றி ஓட்டியதாக இரு வாகனங்கள், இன்சூரன்ஸ் இன்றி 12 வாகனங்கள், புகை சான்று இல்லாத 10 வாகனங்கள், அனுமதிக்கு புறம்பாக இயக்கிய இரண்டு வாகனங்கள், ஏர் ஹார்ன் பயன்படுத்திய ஐந்து வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 84 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நம்பர் பிளேட் சரியாக இல்லாத ஏழு வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோபி பகுதியில் ஏராளமான டூ விலர்களின் நம்பர் பிளேட்டில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளின் படங்கள் பதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி நிர்வாகிகள் கொண்ட நம்பர் பிளேட்டை அகற்ற வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறினால், ஒவ்வொரு முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இருந்தும் ஃபோன் வருகிறது.அரசியல் கட்சி நிர்வாகிகள் படம் பதிக்கப்பட்டுள்ள நம்பர் பிளேட் கழற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ