உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதிதாக மனு வழங்கியோர் ஓட்டளிக்க இயலாது

புதிதாக மனு வழங்கியோர் ஓட்டளிக்க இயலாது

ஈரோடு:''வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் வழங்கியவர்கள், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க இயலாது,'' என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் குறித்து பெருமளவில் வினாக்கள் எழுப்பப்படுகிறது.சட்டம் மற்றும் விதிப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் செய்யப்படும் முன் படிவம் தாக்கல் செய்த நாள் நீங்கலாக, ஏழு நாட்கள் அறிவிப்பு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அத்துடன், மனுக்களை பரிசீலனை செய்ய குறைந்த பட்ச கால அவகாசம் தேவைப்படும். சமீபத்தில் பெயர் சேர்க்க மனு அளித்தவர்கள் பெயர்கள் சட்டப்படி தற்போது சேர்க்க இயலாது. மேலும், உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாக செப்டம்பர் 29ம் தேதி என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடக்கிறது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதி ஏற்படுத்தும் நாள் 2011 ஜனவரி 1ம் தேதி. எனவே, இந்த தேதியின்போது 18 வயது நிறைவு பெற்ற அனைவரும், அக்டோபர் 24ம் தேதி துவங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போதுதான், தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.அவ்வாறு பெயர் சேர்க்கப்பட்டவர்களின் வாக்காளர் பட்டியல், 2012 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். எனவே, தற்போது நடக்கும் தொடர் திருத்தத்தில், அத்தகைய நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட இயலாது. அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட முடியாது.இவ்வாறு கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

AaaAaaEee
செப் 08, 2025 02:41

குட் நியூஸ்???


sasikumaren
செப் 07, 2025 22:08

ரஷ்யாவின் மிகவும் மகிழ்ச்சியான செய்தி புற்றுநோய்க்கு மருந்து நிறைய பேருக்கு மறு உயிர் கிடைக்கும் இந்தியாவுக்கும் இந்த மருந்து வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை