உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி

கோபி நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சியில் தலைவர் பதவிக்கு ஏழு பேரும், 30 கவுன்சிலர் பதவிக்கு 204 பேரும் போட்டியிடுகின்றனர். கோபி யூனியனில் மொத்தம் 924 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.கோபி நகராட்சிக்கு அக்., 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று, ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்தனர். கோபி நகராட்சி தலைவர் பதவிக்கு ரேவதிதேவி (அ.தி.மு.க.,), சத்யா ( தி.மு.க.), தமிழ்செல்வி (தே.மு.தி.க.), கீதா (ம.தி.மு.க.), அஸ்ரிப்பேகம் (பா.ம.க.,), சித்ரா (காங்.,), சுசிலாமணி ஆகிய ஏழு பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் போட்டியிடும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள் முறையே வருமாறு:வார்டு1; ஈஸ்வரி, காஞ்சனாதேவி உள்பட ஏழு பேர், 2: பேபி, முத்துலட்சுமி உள்பட நான்கு பேர், 3: குழந்தையம்மாள், தனலட்சுமி உள்பட எட்டு பேர், 4: ஜெயக்குமார், பெருமாள் உள்பட 10 பேர், 5: முத்தான், காளியப்பன் உள்பட ஆறு பேர், 6: சந்திரசேகரன், காளீஸ்வரன் உள்பட ஐந்து பேர், 7: பெரியசாமி, அய்யாசாமி உள்பட 5 பேர், 8: கொடீஸ்வரன், குமாரசீனிவாஸ் உள்பட ஆறு பேர், 9: கார்த்திகேயன், மோகன் உள்பட10 பேர்.வார்டு 10: ரமேஷ்குமார், சாந்தி உள்பட11 பேர், 11: விஸ்வநாதன், தெய்வசிகாமணி உள்பட ஆறு பேர், 12: கவிதா, உமாமகேஸ்வரி உள்பட நான்கு பேர், 13: இளங்கோ, கருணாகரன் உள்பட ஒன்பது பேர், 14: வாசுதண்டபாணி, வின்சென்ட்பால் உள்பட ஐந்து பேர், 15: தமிழ்செல்வி, மமூன்ஜின்னா உள்பட ஆறு பேர், 16: ராமன், கேசவன் உள்பட எட்டு பேர், 17: மாரிச்சாமி, ரகுபதி உள்பட நான்கு பேர், 18: தேன்மொழி, மெய்யழகன் உள்பட ஆறு பேர், 19: கஸ்தூரிதிலகம், செந்தில்வடிவு உள்பட ஐந்து பேர், 20: வேலுசாமி, மணிகண்டன் உள்பட ஏழு பேர்.வார்டு 21: ஈஸ்வரன், சத்திவேல், உள்பட ஏழு பேர், 22: வஜ்ரவேல், ராஜேந்திரகுமார் உள்பட எட்டு பேர், 23: செல்வி, ராஜம்மாள் உள்பட ஏழு பேர், 24: வேல்விழி, ஆனந்தவள்ளி உள்பட ஆறு பேர், 25: சையது புடான்சா, ராஜேந்திரன் உள்பட ஆறு பேர், 26: செல்வராஜ், பழனிசாமி உள்பட எட்டு பேர், 27: காளியப்பன், ஈஸ்வரன் உள்பட 10 பேர், 28: நீலாவதி, விஜயா உள்பட ஏழு பேர், 29: மரகதம், விஜயா உள்பட ஐந்து பேர், 30: பெரியசாமி, சண்முகம் உள்பட எட்டு பேர் என மொத்தம் 204 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.கோபி யூனியனுக்குட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 20 பேர், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 106 பேரும், 21 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 138 பேரும், பஞ்., வார்டு உறுப்பினர் பதவிக்கு 660 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை