உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரூர் பலி சம்பவத்தால் நிகழ்வுகள் ஒத்திவைப்பு

கரூர் பலி சம்பவத்தால் நிகழ்வுகள் ஒத்திவைப்பு

கோபி:கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 40 பேர் பலியான சம்பவம், நாட்டை உலுக்கியுள்ளது. இதனால் கோபியில் நேற்று நடக்கவிருந்த பல்வேறு அரசியல் கட்சியி நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. கோபி முத்து மகாலில் நடப்பதாக இருந்த தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம், ஈரோடு மாவட்ட பா.ஜ., சார்பில் கோபியில் நடக்கவிருந்த, ஜி.எஸ்.டி., வரி குறைப்பு விளக்க மற்றும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் கோபி சட்டசபை தொகுதியில், எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில் நடக்கவிருந்த வளர்ச்சி திட்டப்பணிகளின் துவக்க நிகழ்ச்சியும் ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை