மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்
09-Jun-2025
டி.என்.பாளையம், 1ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில், பங்களாபுதுார் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு பொலிரோ பிக்-அப் வாகனத்தில், ஏராளமான வெடிபொருள் இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் பிரகாஷ் ராஜ், 25, அவருடன் வந்த சுப்ரமாவிடம் விசாரணை நடத்தினர்.கவுந்தப்பாடியை சேர்ந்த ஏழுமலையான் எக்ஸ்புளோசிவ் குடோன் உரிமையாளர் சுப்பிரமணிக்கு சொந்தமானது என்பதும், வெடிபொருட்களை டி.என்.பாளையம் அருகே இயங்கி வரும் ஜெயசக்தி கிரசருக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு சென்றதாக இருவரையும் கைது செய்தனர். வெடி பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.குடோன் உரிமையாளர் சுப்பிரமணி மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வாகனத்தில், 161 நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 150 எலக்டிரிக் டெட்டனேட்டர், 993 ஜெலட்டின் குச்சி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
09-Jun-2025