உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் காளை சிலை குறித்து பொய் பிரசாரம்: வேண்டாம்

காங்கேயம் காளை சிலை குறித்து பொய் பிரசாரம்: வேண்டாம்

காங்கேயம், காங்கேயம் காளை சிலை அமைப்பது குறித்து, பொய் பிரசாரம் வேண்டாம் என்று, காங்கேயம் காளை சிலை அமைப்பு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கேயம் காளை சிலை அமைப்பு சங்க தலைவர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கம்யூ., இயக்கத்தை சார்ந்த ஒரு சிலர் தங்களுடைய சுய விளம்பரத்துக்கு, காங்கேயத்தில் காளை சிலை அமைப்பது தொடர்பாக, மக்களிடம் பொய் பிரசாரம் செய்கின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. Silai.Com நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காளை சிலை நிறுவுவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ