உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

மொபட் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

தாராபுரம் தாராபுரத்தை அடுத்த கோனேரிபட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, 65; நேற்று மாலை 5:00 மணியளவில், தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் ரங்கபாளையம் பிரிவு அருகே, மொபட்டில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது கோவையை சேர்ந்த ஈஸ்வரன், 23, ஓட்டிச் சென்ற பைக், மொபட்டில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சுப்பிரமணி படுகாயமடைந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !