டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலி
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த குண்டடம், குழந்தை பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 50; மானுார்பாளையத்தில் இருந்து குழந்தைபாளையம் செல்லும் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் துாக்கி வீசப்பட்டு பலியானார். மற்றொரு டூவீலரில் வந்த பொன்னாபுரம் ஜெயராமன், காயங்களுடன் உயிர் தப்பினார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.