ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கு
ஈரோடு, டிச. 18-ஈரோட்டில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது.கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் நாச்சிமுத்து வரவேற்றார்.அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன முன்னாள் பொருளாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் சங்கரன், மணிபாரதி, பாலசுப்பிரமணியன், ஹரிதாஸ் உட்பட பலர் பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கு, 110 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ஒட்டுமொத்தமாக வழங்க வேண்டும். பணியாற்றி ஓய்வு பெற்ற அனைவருக்கும், ஓய்வூதியம் உரிய நேரத்தில் வழங்க அரசாணை வழங்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் உள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி நன்றி கூறினார்.